ADDED : ஏப் 06, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் எழில், 62. இவர், வியாசர்பாடி, கல்யாணபுரம் 1வது தெருவில், மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை கடை திறக்க வந்தபோது, கடையின் ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரையை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. 26 கிலோ அரிசி மூட்டை, 5 கிலோ பாமாயில், 5 லிட்டர் கோல்டு வின்னர் ஆயில், 2 பாட்டில் சாக்லேட், பிஸ்கெட் பாக்கெட்டுகள், சோப்புகள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த 2,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.