/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எல்.இ.டி., விளக்குகள் அமைத்தும் ஜி.எஸ்.டி., சாலையில் இருள்
/
எல்.இ.டி., விளக்குகள் அமைத்தும் ஜி.எஸ்.டி., சாலையில் இருள்
எல்.இ.டி., விளக்குகள் அமைத்தும் ஜி.எஸ்.டி., சாலையில் இருள்
எல்.இ.டி., விளக்குகள் அமைத்தும் ஜி.எஸ்.டி., சாலையில் இருள்
ADDED : பிப் 16, 2024 12:35 AM

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட பின், 44,498 மின் விளக்குகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக 48.33 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது.
டெண்டர் விட்டு பல மாதங்களாகியும் பணி துவங்கப்படாததால், மாநகராட்சி கூட்டங்களில், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
நீண்ட இழுபறிக்கு பின், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பல பகுதிகளில் ஏராளமான விளக்குகள் எரியாமல் உள்ளன.
பல்லாவரம் மேம்பாலத்தில் 30க்கும் மேற்பட்ட விளக்குகள் எரியவில்லை. எம்.ஐ.டி., சிட்லப்பாக்கம் மேம்பாலங்களிலும், பல விளக்குகள் எரியவில்லை.
இதனால், அதிக போக்குவரத்து உடைய ஜி.எஸ்.டி., சாலையில், இரவில் போதிய வெளிச்சம் இன்றி, வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்; நெரிசலும் ஏற்படுகிறது.
புதிதாக பொருத்தப்பட்ட எல்.இ.டி., விளக்குகள் எரியாதது, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கண்காணிக்காததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, புதிதாக விளக்குகள் பொருத்தப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்து, அனைத்து விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.