/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை
/
ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை
ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை
ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 24, 2024 12:36 AM
குரோம்பேட்டை,
தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில், தீபாவளி பண்டிகையின்போது, ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்படும் நெரிசலை தடுக்க, வணிக நிறுவனத்தினர் மற்றும் கடைகாரர்களை அழைத்து, போக்குவரத்து போலீசார் நேற்று, ஆலோசனை நடத்தினர். இதில் 80க்கும் மேற்பட்ட கடைகாரர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், போலீசார் கூறியதாவது:
தங்களது கடைகளுக்கு வரும் வாகனங்களை, சாலையில் நிறுத்த அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் இறங்கிய உடன், வாகனங்கள் அங்கிருந்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.
இதற்கென, தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை, அங்குள்ள வாகன நிறுத்த பகுதியில் நிறுத்த வேண்டும். அங்கு இடமில்லை என்றால், தனியாக ஒரு இடத்தை ஏற்படுத்தி, வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த வாரம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளுக்கு வந்தோரின் வாகனங்களால், தாம்பரம், குரோம்பேட்டையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம் வள்ளுவர் குருகுலம் சிக்னல் முதல் மெப்ஸ் சிக்னல் வரை ஜி.எஸ்.டி., சாலையில், வாகனங்களை நிறுத்துவது சிறிது கூட குறையவில்லை. அங்குள்ள கடைகாரர்கள், போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தருவதே இல்லை.

