தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்ட்ரலில் இருந்து ஜி.டி., ரயில் இயக்கம்

சென்ட்ரலில் இருந்து ஜி.டி., ரயில் இயக்கம்

சென்ட்ரலில் இருந்து ஜி.டி., ரயில் இயக்கம்


ADDED : ஜூன் 08, 2025 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் ஜி.டி., எனும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 9ம் தேதி முதல் அந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:10 மணிக்கு புது டில்லி புறப்படும். புதுடில்லியில் இருந்து வரும் ரயிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us