/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேட் பெயர்ந்து விழுந்து காவலாளி பலி
/
கேட் பெயர்ந்து விழுந்து காவலாளி பலி
ADDED : ஜன 03, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி,
செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் அன்பரசு, 56. சோழிங்கநல்லுார், எல்காட் அவென்யூவில் உள்ள என்.பி.எல்., அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, தள்ளித் திறக்கும் வகையிலான சக்கரம் பொருத்திய, 8 அடி உயரம் கொண்ட இரும்பு கேட் உள்ளது.
இந்த கேட், பல மாதமாக பழுதடைந்து உள்ளது. நேற்று அதிகாலை, கேட்டை திறந்த போது, பிடிமானம் பெயர்ந்து, அன்பரசு மீது கேட் விழுந்தது. இதில், அவர் உடல் நசுங்கி பலியானார்.
செம்மஞ்சேரி போலீசார், பராமரிப்பு மேற்பார்வையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

