UPDATED : ஜூன் 13, 2026 08:14 PM
ADDED : ஜூன் 13, 2026 08:10 PM
'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சியில், ராஜலட்சுமி குழுமத்தின் இயக்குநர் அபூர்வா ஹரி பேசியதாவது:
தொழில்நுட்பம் மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. 'கோடிங்' படிப்பது அவசியம் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். ஆனால், தற்போது தொழில்நுட்பம் வாயிலாக, கோடிங் உருவாக்க முடியும்.
நல்ல பொறியளராக இருக்க வேண்டும் என்றால், ஒரு தலைப்பு பற்றி முழுதும் அறிந்து கொள்ளும் ஆர்வம், மாணவர்களிடம் இருக்க வேண்டும். இயந்திரம் எப்படி செயல்படுகிறது; எந்த வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.
நம் மனநிலை குறுகியதாவும், விருப்பங்கள் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், ஆர்வமாக இருந்தால், தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், அதைப்பற்றி முழுதும் கற்றுகொள்ள முடியும்.
தொழில்நுட்பத்திற்கு ஏற்றார்போல், உங்களை புதுப்பித்துக்கொண்டால், நீங்களே அந்த தொழில்நுட்பத்தை வடிவமைக்க முடியும். எந்த பிரச்னை இருந்தாலும் அதற்கு தீர்வு காண வேண்டும்.
நல்ல பொறியாளர்கள் உருவாக்கும் பயணத்தில், பெரும்பாலான கல்லுாரிகள் தங்கள் மாணவர்களுக்கு வளங்கள் மற்றும் கருவிகள் கிடைக்க கடினமாக உழைக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
