/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி ஆசர்கானா பஸ் நிறுத்தம் ரூ. 1.5௦ கோடியில் சீரமைப்பு
/
கிண்டி ஆசர்கானா பஸ் நிறுத்தம் ரூ. 1.5௦ கோடியில் சீரமைப்பு
கிண்டி ஆசர்கானா பஸ் நிறுத்தம் ரூ. 1.5௦ கோடியில் சீரமைப்பு
கிண்டி ஆசர்கானா பஸ் நிறுத்தம் ரூ. 1.5௦ கோடியில் சீரமைப்பு
ADDED : நவ 03, 2025 02:24 AM
ஆலந்துார்: கிண்டி ஆசர்கானா பேருந்து நிறுத்தம், எம்.எல்.ஏ., தொகுதி நிதி, 1.5௦ கோடி ரூபாயில் 'ஏசி' இருக்கை, கழிப்பறை வசதிகளுடன் சீரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.
ஆலந்துார், ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தில், கடந்த 2015ம் ஆண்டு, கண்டோன்மென்ட் நிர்வாகத்தின் அனுமதியுடன், தனியார் நிறுவனம் சார்பில், 1.25 கோடி ரூபாயில் கழிப்பறைகளுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட நான்கு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அவற்றை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், அங்கிருந்த இருக்கைகள் மாயமாகின. கடந்த ஒன்றரை ஆண்டிற்கும் மேலாக பேருந்துக்கு காத்திருக்கும் பெண்கள், கர்ப்பிணியர், முதியோர் கால் கடுக்க நின்று தவித்தனர்.
இது குறித்து, நம் நாளிதழ் தொடர் செய்திகளை வெளியிட்டு வந்தது. இந்நிலையில், ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 1.5௦ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, பணிகள் துவக்குவதற்கான பூமி பூஜை, எம்.எல்.ஏ.,வும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் சில நாட்களுக்கு முன் நடந்தது.
ஆசர்கானா பேருந்து நிறுத்தம், நவீன முறையில், 180 அடி நீளத்திற்கும், 10 அடி அகலத்திற்கும் அமைகிறது. இருக்கைகள், விளக்குகள், ஆடவர், மகளிருக்கு தனித்தனி கழிப்பறை, பேருந்து நிறுத்தத்தின் ஒரு பகுதி குளிர்சாதன வசதியுடன் அமைகிறது.
கட்டுமானப் பணிகள் முடிந்து, அடுத்த நான்கு மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

