ADDED : ஏப் 10, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
மயிலாப்பூர்: குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட 'ஏர் கன்' வகை துப்பாக்கி குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாப்பூர், சி.ஐ.டி., காலனி, இரண்டாவது பிரதான சாலையில், துாய்மை பணியாளர் ஆதிகேசவன், 43, என் பவர், துாய்மை பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
தொட்டியில் உள்ள குப்பையை தரம் பிரித்து கொண்டிருந்தபோது, அதில், 'ஏர் கன்' வகை துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதை எடுத்த அவர், உயர் அதிகாரி பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தார். பின், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அந்த துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டது.
குப்பை தொட்டியில் துப்பாக்கியை வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
