ADDED : பிப் 16, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார், தனிப்படை போலீசார் நேற்று எண்ணுார், காமராஜர் நகர், 2 வது தெருவில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், விமல்பாக்கு, கூலிப் போன்ற குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக, எண்ணுார், காமராஜர் நகரைச் சேர்ந்த வீரா என்ற வீரய்யா, 30, கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், மணலிபுதுநகரில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார், அங்கு சோதனையிட்டு, 159 கிலோ ஹான்ஸ், 6 கிலோ போதை பாக்கு, 35 கிலோ கூலிப் உட்பட மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.