ADDED : ஜூன் 13, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி, ஜூன் 13-
சென்னையில் கடந்த 14 நாட்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த 63 பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.
அவர்களிடம் இருந்து, 46 கிலோ குட்கா, 50,000 ரூபாய் ரொக்கம், 2 இருசக்கர வாகனம், 1 இலகுரக வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 10 கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை உதவியுடன் 'சீல்' வைத்து உள்ளனர்.
சென்னையில் நடப்பாண்டில், தடையை மீறி குட்கா புகையிலை விற்பனை செய்த, 301 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது.