ADDED : பிப் 08, 2024 12:36 AM

அ நிறம் | அளவு
கொடுங்கையூர், கொடுங்கையூர், திருவள்ளூர் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் ஆய்வு மேற்கொண்டு, 95 கிலோ ஹான்ஸ், 86 கிலோ விமல் பாக்கு உள்ளிட்ட 181 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த லட்சுமணன், 57, கொடுங்கையூரைச் சேர்ந்த பொன்ராஜ், 43, புழல் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ், 32, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
