ADDED : மார் 21, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலம், வேளச்சேரி, ஆண்டாள் நகரில், இளைஞர்கள் உடல் நலத்தை மேம்படுத்த, உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஆண்டாள் நகர், இரண்டாவது பிரதான சாலையில், கவுன்சிலர் நிதி, 35 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன், உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டார்.