/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணி
/
அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணி
ADDED : பிப் 05, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழைய மழைநீர் வடிகால்வாய்களை புதுப்பிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.
குறிப்பாக, மயிலாப்பூர் பி.எஸ்.,சிவசாமி சாலை, தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வடிகால்வாயை சீரமைக்கும் பணி முழுமை அடையாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. இதனால், கழிவுநீர் கலந்து கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அரைகுறையாக விடப்பட்டுள்ள வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாச்சியப்பன், மயிலாப்பூர்.

