/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைபம்ப் குழாய்களை புதுப்பிக்க வேண்டும்
/
கைபம்ப் குழாய்களை புதுப்பிக்க வேண்டும்
ADDED : பிப் 13, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி மண்டலம், வார்டு 191, ஜல்லடையன்பேட்டையில், 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பேரூராட்சி நிர்வாகத்தால், குடிநீர் கைபம்ப் நிறுவப்பட்டது.
இரு ஆண்டுகளாக, இந்த அடி குழாய்கள் பராமரிக்கப்படாமல் துருப்பிடித்து, பயனற்ற நிலையில் உள்ளன. பகுதியைச் சுற்றி ஏரிகள் இருப்பதால், இந்த அடி குழாய்களில், கோடைக்காலத்திலும் நீர் வரும்
கோடைக்காலத்திற்கு முன், பழுதடைந்த நிலையில் உள்ள கை பம்ப்களை கணக்கிலெடுத்து, மீண்டும் புத்துயிர் அளிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.பாப்பம்மாள், 62, ஜல்லடையன்பேட்டை.