மாற்றுத்திறனாளிக்கான ‘விழுதுகள்ʼ சேவை மையம் மணலியில் தொடக்கம்
மாற்றுத்திறனாளிக்கான ‘விழுதுகள்ʼ சேவை மையம் மணலியில் தொடக்கம்
ADDED : நவ 26, 2026 04:53 PM

சென்னை: மணலியில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்ʼ ஒருங்கிணைந்த சேவை மையம், நேற்று தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உரிமைகள் திட்டத்தின் கீழ், மணலி அடுத்த மஞ்சம்பாக்கத்தில், செயல்பட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கான சேவை மைய கட்டடம் சேதமானது.
இக்கட்டத்தை புதுப்பிப்பதற்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், எட்டு லட்சம் ரூபாய் செலவில், வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்ʼ என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், மாதவரம் த.வெ.க., – எம்.எல்.ஏ., விஜய் பிரபு ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சேவை மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை, உளவியல் ஆலோசனை, அறிவாற்றல் மேம்பாடு, பேச்சு, தகவல் தொடர்பு திறன் பயிற்சி, அடையாள அட்டை, அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், சிறப்புக் கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
