sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (04.02.2024) சென்னை

/

இன்று இனிதாக (04.02.2024) சென்னை

இன்று இனிதாக (04.02.2024) சென்னை

இன்று இனிதாக (04.02.2024) சென்னை


ADDED : பிப் 04, 2024 01:19 AM

Google News

ADDED : பிப் 04, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 உழவாரப்பணி: வேளச்சேரி உழவாரப்பணி மன்றத்தின் கோவில் சுத்தம் செய்யும் பணி. பங்கேற்பு: ஆடலரசன் குழுவினர், காலை 9:00 மணி முதல். இடம்: கனகாம்பிகை உடனுறை கையிலாசநாதர் கோவில், கோவளம்.

 லட்சுமி ஹயக்ரீவ ஹோமம்: பொது தேர்வில் மாணவ - மாணவியர் நல்ல மதிப்பெண் பெற ஹோமம். காலை 9:00 மணி. இடம்: பெருந்தேவி நாயிகா சமேத வேங்கடவரதப் பெருமாள் கோவில், அக்ரஹார தெரு, பருத்திப்பட்டு.

 அம்பாள் வழிபாடு: வியாபார அபிவிருத்திக்கான சிறப்பு வழிபாடு - காலை முதல் மாலை வரை. இடம்: காத்யாயனி அம்மன் கோவில், குன்றத்துார்.

 மஹா சண்டி ஹோமம்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை, 4:00 மணி. ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 95516 97770.

 ஆராதனை விழா: 177வது சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை. மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம், மாதவப் பெருமாள் கோவில் அருகில், மயிலாப்பூர்.

 கூட்டு பிரார்த்தனை: நாம ஜெபம், கூட்டுப் பிரார்த்தனை - மாலை 4:00 மணி. சத்சங்கம் - மாலை 5:00 மணி. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், ஆதனுார்.

 கூட்டு தியானம்: சாவித்திரி வாசித்தல், காலை 10:00 மணி. இடம்: அரவிந்தர் சொசைட்டி, 5, ஸ்மித் சாலை, அண்ணா சாலை - 2.

 திருநட்சத்திர விழா: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நாதமுனிகள் திருநட்சத்திர விழா - இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

 கராத்தே போட்டி: ஷிக் கராத்தே அகாடமியின் 14வது மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான கராத்தே போட்டி - காலை 9:00 மணி முதல். இடம்: எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி இன்டோர் ஸ்டேடியம், கவுரிவாக்கம்.

 திருக்குறள் அரங்கம்: தலைமை: முனைவர் கி.ஈஸ்வரி, சிறப்புரை: விஜயலட்சுமி மாசிலாமணி, காலை 10:00 மணி. இடம்: சென்னை உயர்நிலைப் பள்ளி, கஸ்துாரிபாய் நகர், அடையாறு.

 இலவச கண் மருத்துவ முகாம்: காலை 8:00 மணி. மருத்துவ கருத்தரங்கம், பட்டிமன்றம். பங்கேற்பு: மருத்துவர்கள் எம்.பாலகிருஷ்ணன், திருமதி ரேகா, சதீஷ்குமார், நேத்ரா சதீஷ்குமார், காலை 9:00 மணி. இடம்: பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை, காவேரி நகர், சைதாப்பேட்டை.

 இலவச பல் மருத்துவ முகாம்: சிகிச்சை, ஆலோசனை முகாம். சிறப்பு நிபுணர்: டாக்டர் ஏ.ஆர்.மதுமதி. காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: தீபம் மெட்பர்ஸ்ட் மருத்துவமனை, பள்ளிக்கரணை.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.

 இலவச யோகா பயிற்சி: தியானம், சித்தர் கூட்டு வழிபாடு - காலை 7:00 மணி முதல். இடம்: பதஞ்சலி மஹரிஷி யோகாலயம், காமாட்சி அம்மன் நகர் அனெக்ஸ், மாங்காடு.

 இலவச கையிலாய வாத்திய பயிற்சி: காலை 10:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி.

 இலவச சங்குநாத பயிற்சி: சங்குநாதம் அறிவியல் வகுப்பு - நடத்துபவர்: கோசைநகரான், காலை 7:00 மணி முதல். இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், அம்பத்துார்.

கண்காட்சி


 ஆன்மிக பொருட்கள்: சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா 'ஏசி' ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

 ஓவியப் போட்டி: வசந்தா மெமோரியல் டிரஸ்ட் சார்பில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. காலை 10:00 மணி. இடம்: குருநானக் கல்லுாரி, வேளச்சேரி.






      Dinamalar
      Follow us