ADDED : மே 10, 2024 11:50 PM
பார்த்தசாரதி கோவில்
உடையவர் சிறிய தேர் பெரியவீதி புறப்பாடு- -- காலை 7:00 மணி. திருமஞ்சனம் - -மதியம் 2:00 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரிய கேடயம் பெரிய வீதி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம், விறன்மிண்ட நாயனார் விழா, கத்திரி அபிஷேகம் ஆரம்பம் - -மாலை 4:30 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.
மாதவ பெருமாள் கோவில்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருமாள் விடையாற்றி உற்சவம் - -மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் காலை 4:30 - 6:00 திருத்தேர், மாலை - புஷ்ப பல்லக்கு. இடம்: ஸ்ரீபெரும்புதுார்.
பெரு வேள்வி விழா
திருவாசகம் முற்றோதல் -- காலை 7:00 முதல் பகல் 1:30 மணி வரை. இடம்: சித் சபா மணிக்கூடம், 4வது தெரு, மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
சொற்பொழிவு
சீனிவாசன் பெருமாள் கோவிலில் கம்ப ராமாயணம் - தேரழுந்துார் புலவர் அரங்கராசன் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன் பேட்டை. மேடவாக்கம்.
சொற்பொழிவு
ஸ்ரீபிரசன்ன விநாயக பக்த ஜன சபையின் கம்பராமாயணம் - திருச்சி கல்யாணராமன் --- மாலை 6:30 முதல் 8:00 வரை. இடம்: ஸ்ரீசிவவிஷ்ணு கோவில், நடேச நகர், விருகம்பாக்கம்.
சொற்பொழிவு
பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக கருடன் கருணை - மகேஷ் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது
இலவச கண் பரிசோதனை
பங்கேற்பு: மருத்துவர் ஜே.லட்சுமணன் குழுவினர் - காலை 8:00 முதல் பகல் 12:00 மணி வரை. இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், பிராமின் தெரு, நெமிலிசேரி.
இலவச கராத்தே பயிற்சி
பெண்களுக்கு பயிற்சி -- காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.