ADDED : ஜன 30, 2024 12:01 AM
-ஆன்மிகம்
சண்டேசர், திலகவதியார் குருபூஜை: மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.
சண்டேசர், திலகவதியார் குருபூஜை: இரவு 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.
அம்பாள் வழிபாடு: வீடு, சொத்து அமைய, கடன் தீர சிறப்பு வழிபாடு - காலை முதல் மாலை வரை. இடம்: காத்யாயனி அம்மன் கோவில், குன்றத்துார்.
லட்சார்ச்சனை: கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள் ஏக தின லட்சார்ச்சனை - நேரம்: காலை 8:00 மணி முதல். சண்டேஸ்வர நாயனார் விழா - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
வேதவல்லி தாயார் புறப்பாடு: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வேதவல்லி தாயார் புறப்பாடு - மாலை 5:30 மணி, வேதவல்லி தாயார் ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
மஹா சண்டி ஹோமம்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை 4:00 மணி. ஹோமம் - மாலை, 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 95516 97770.
நுாற்றாண்டு திருமுறை பெருவிழா: தேவார இன்னிசை: பா.சற்குருநாதன் ஓதுவார் -மாலை 6:00 மணி. இடம்: சிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜனசபா, முனுசாமி செட்டி தோட்டம், 3வது தெரு, மணியக்கார சவுல்டரி ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை.
ராகு கால வழிபாடு: துர்க்கையம்மன் கோவில்: அபிஷேகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
அரவிந்தர் அன்னை தியான மையம்: அபிஷேகம் - மதியம் 3:00 மணி முதல். இடம்: பாலையா கார்டன், மடிப்பாக்கம்.
துர்க்காதேவிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.
உபன்யாசம்: சுப்ரமண்ய புஜங்கம்: கணபதிதாசன், மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
நாட்டிய விழா: பரதநாட்டியம்: ஏ.விஷ்ணு பிரசாத், எஸ்.பிரவீண், வி.சைலேந்திரன் குழுவினர் - மாலை 5:00. மணி. அந்தரா பர்மாமிங் ஆர்ட்ஸ் சென்டர் மாணவர்கள் - இரவு 7:00 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.
காந்தியடிகள் நினைவு நாள்: சிலைக்கு மலர் அஞ்சலி, பங்கேற்பு: தமிழ்நாடு வாணியர் பேரவை, காலை 10:00 மணி. இடம்: மகாத்மா காந்தி சிலை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம்.
பயிற்சி வகுப்பு: யுடியூப் சேனல் உருவாக்குதல், இணைய தளத்தில் பயன்படுத்துதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு. காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை. இடம்: அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி. தொடர்புக்கு: 86681 02600.
ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.
கண்காட்சி
ஆன்மிகப் பொருட்கள்: சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா 'ஏசி' ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. முற்பகல் முதல் இரவு வரை. இடம்: சென்னை.
ரயில்வே மைதானம்: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. பிற்பகல், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.