/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்வில் ஆள்மாறாட்டம்; ஹரியானா நபர் சிக்கினார்
/
தேர்வில் ஆள்மாறாட்டம்; ஹரியானா நபர் சிக்கினார்
ADDED : நவ 11, 2024 07:03 AM

ஆவடி: ஆவடி அடுத்த மிட்னமல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், கீழ் பிரிவு எழுத்தர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. போட்டிகள், மூன்று ஷிப்ட் அடிப்படையில் நடந்த தேர்வில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,000 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
காலை நடந்த தேர்வின் போது, அனைவரது ஹால் டிக்கெட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பர்வீன் சர்மா, 25, என்பவரின் ஹால் டிக்கெட் புகைப்படத்தில் முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
விசாரணையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த மகேந்திர பிரதாப், 21, என்பவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுத வந்தது தெரிந்தது. இதற்காக, பர்வீன் சர்மா பேரம் பேசி, 3 லட்சம் ரூபாய் பெற்றதும் தெரிய வந்தது.
இது குறித்து, விமானப்படை ஜூனியர் வாரண்ட் அதிகாரி சசிகுமார் கொடுத்த புகாரின்படி, பர்வீன் சர்மா கைது செய்யப்பட்டு, நேற்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆள்மாறாட்டம் செய்ய உடந்தையாக இருந்த மகேந்திர பிரதாப்பை, போலீசார் தேடி வருகின்றனர்.