/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.40 கோடியில் சுகாதார நிலையங்கள்
/
ரூ.2.40 கோடியில் சுகாதார நிலையங்கள்
ADDED : நவ 15, 2024 12:23 AM
கோடம்பாக்கம், நவ. 15-
கோடம்பாக்கம் மண்டலத்தில், 2.40 கோடி ரூபாய் மதிப்பில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 133வது வார்டு தி.நகரில், தெற்கு உஸ்மான் சாலையில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால், பாண்டி பஜார் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், பகுதிவாசிகள் தனியார் கிளினிக்கை நாடும் நிலை உள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் தி.நகர் ராதாகிருஷ்ணன் தெருவில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதேபோல், 140வது வார்டு மேற்கு சைதாப்பேட்டை குமரன் தெருவிலும், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.