/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அயனாவரம் இணைப்பு பாலத்தில் சுகாதார சீர்கேடு
/
அயனாவரம் இணைப்பு பாலத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 03, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்:அண்ணா நகர் மண்டலம், 97வது வார்டில், அயனாவரம், சக்கரவர்த்தி நகர் உள்ளது. இந்நகர் மற்றும் நியூ ஆவடி சாலைக்கான இணைப்பு பாலத்தின் கீழ் பகுதியில், குடிநீர் வாரியத்தின் ராட்சத குழாய் செல்கிறது.
வாரியத்திற்கு சொந்தமான இணைப்பு பாலத்தின் இருபுறத்திலும், அத்துமீறி சிலர், குப்பையை கொட்டி வருகின்றனர். அத்துடன், அப்பகுதிகளில் மாடுகளை வளர்ப்போர் மாட்டுக்கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதனால், அவ்வழியாக செல்வோர் முகம்சுளிக்கும் வகையில், சுகாதார சீர்கேடாகக் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.