ADDED : ஏப் 22, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழிச்சாலைக்கான மேம்பாலம் கட்டப்பட உள்ளதால், சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், அண்ணா அறிவாலயத்தில் இருந்து தேனாம்பேட்டை செனடாப் சாலை சந்திப்பு வரை நேற்று, கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.