/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை
/
சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை
ADDED : ஜூலை 03, 2025 12:32 AM

சென்னை, பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று இரவு சென்னையில் பரவலாக மழை பெய்தது.
கடந்த நான்கு நாட்களாக பகல் வேளைகளில் அனல் காற்றுடன், கடுமையான வெயில் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் புழுக்கமான சூழல் நிலவியதால், பலரும் உறக்கமின்றி தவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று மாலை துவங்கி இரவு வரை, பல இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் வேலைகளுக்கு சென்று வீடு திரும்பியோர், எதிர்பாராத மழையால் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தவிர சாலையோர நடைபாதை வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு மணி நேரம் தொடர்மழை காரணமாக, தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.