/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
947 ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம் துவக்கம்
/
947 ஓட்டுச்சாவடிகளில் உதவி மையம் துவக்கம்
ADDED : நவ 18, 2025 04:46 AM
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண, 947 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் உதவி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்களை பூர்த்தி செய்வதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், பலர் படிவங்களை தவறாக பூர்த்தி செய்து வருகின்றனர். எனவே, வாக்காளர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என, நம் நாளிதழில் செய்திகள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, 947 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் உதவி மையங்களை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2005ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் விபரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவவும், இன்று முதல், 25ம் தேதி வரை எட்டு நாட்கள், 947 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன.
இந்த எட்டு நாட்களும், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும். வாக்காளர் உதவி மையங்களில், சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம். முதியோர், மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் துணையாக வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

