ADDED : மார் 03, 2026 05:36 AM

அ நிறம் | அளவு
படப்பை: படப்பை அருகே செரப்பணஞ்சேரி அடுத்த வெள்ளேரிதாங்கலை சேர்ந்தவர் யாஷ்மின், 41.
யாஷ்மின், தன் இரு மகள்களுடன், நேற்று முன்தினம் தன் குடிசை வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 5:00 மணிக்கு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
புகை நெடியை உணர்ந்த யாஷ்மின், தன் மகள்களுடன் உடனே வீட்டை விட்டு வெளியேறினார். இதில், குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
இந்நிலையில், மணிமங்கலம், படப்பை போலீசார் சார்பில், பாதிக்கப்பட்ட யாஷ்மின் குடும்பத்திற்கு, 2 மூட்டை அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன், தள்ளுவண்டி கடை நடத்த 20,000 ரூபாய் வழங்கினர்.
