ADDED : ஏப் 20, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை கிண்டியில், வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வரும் 24ம் தேதி, வற்றல், வடகம் தயாரிப்பு பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இதில், ஜவ்வரிசி, தக்காளி, பூண்டு, உருளைக்கிழங்கு, புதினா, கொத்தமல்லி, வெண்டைக்காய், மணத்தக்காளி, சுண்டைக்காய், மோர் மிளகாய் வற்றல்கள் தயாரிக்கும் பயற்சி அளிக்கப்பட உள்ளது.
அடுத்த நாளான 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், நலங்கு மாவு, குப்பைமேனி, ரோஸ், சந்தனம், பாதாம் ஆயில், ரோஸ் ஆயில், குங்குமப்பூ ஆயில் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.