/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழைய வீடுகளின் சுவாரசியம் மயிலையில் 'ஹெரிடேஜ் வாக்'
/
பழைய வீடுகளின் சுவாரசியம் மயிலையில் 'ஹெரிடேஜ் வாக்'
பழைய வீடுகளின் சுவாரசியம் மயிலையில் 'ஹெரிடேஜ் வாக்'
பழைய வீடுகளின் சுவாரசியம் மயிலையில் 'ஹெரிடேஜ் வாக்'
ADDED : ஜன 08, 2024 01:42 AM

மயிலாப்பூர்:மயிலாப்பூர் சுந்தரம் பைனான்ஸ் ஆதரவுடன், கடந்த 4ம் தேதி ஆரம்பித்த, மயிலாப்பூரில் உள்ள பழமையான வீடுகளை பார்வையிடும்,'ஹெரிடேஜ் வாக்' நிகழ்ச்சி, நேற்றுடன் முடிவடைந்தது. இதை கட்டட வடிவமைப்பாளர் தாஹீர சோகிப் தலைமையேற்று நடத்தி, மயிலாப்பூரில் மிச்சமுள்ள பழமையான வீடுகளை சுற்றிக் காண்பித்து, அதன் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.
ஒரு காலத்தில் எல்லா வீடுகளிலும் திண்ணை என்ற ஒன்று இருந்தது. காலப்போக்கில் அது தனி அறைகளாகவும், வாசல்புறத்து கடைகளாகவும் மாறிவிட்டன. 1940ம் ஆண்டு கட்டடங்கள் வெகு சிலவே மிஞ்சியுள்ளன. மற்றவை நவீனத்துவம் பெற்றுவிட்டன.
வீட்டை கட்டியவர்கள் தண்ணீர் வெளியேறும் குழாயைக்கூட, தவளையின் வாய் போன்றும், வாசலை அரண்மனை துாண் போன்றும், 'பால்கனி'களை டிசைன்களுடனும் கட்டியிருந்தனர்.
பெரும்பாலான வீட்டு வாசல்களில் மாடம் அமைக்கப்பட்டு, அதில் விளக்குகள் எரியும். வாசல் கதவு சிறிதாகவே இருக்கும். உள்ளே நுழைவோர் அந்த வீட்டிற்கு தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தி விட்டு நுழைவது போல இருக்கும் என, பல விஷயங்களைக் குறிப்பிட்டார்.
பழைய வீடுகளை இன்னமும் அப்படியே பயன்படுத்துவோரும் உள்ளனர். பழமையான சில வீடுகள் பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.
பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்ப, வீடுகள் நிறைய அறைகளுடன், நீளமான வடிவத்தில் கட்டப்பட்டிருந்தன என்றும் குறிப்பிட்டார்.
இந்த 'ஹெரிடேஜ் வாக்' நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.