/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: ரூ.55 கோடியில் கட்டுது நெ.சா., துறை
/
பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: ரூ.55 கோடியில் கட்டுது நெ.சா., துறை
பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: ரூ.55 கோடியில் கட்டுது நெ.சா., துறை
பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: ரூ.55 கோடியில் கட்டுது நெ.சா., துறை
ADDED : டிச 30, 2025 04:58 AM
சென்னை: காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், பாலாற்றின் குறுக்கே, 55.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை, நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு கிராமத்திற்கு அருகே பாலாறு கடந்து செல்கிறது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை, செய்யாறு, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர்.
அகலம் குறைவான இந்த பாலத்தில், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், பாலம் பலம் குறைந்ததுடன் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
இதற்கு மாற்றாக, புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள், ஓராண்டுக்கு முன் முடிக்கப்பட்டன.
நிதி ஒதுக்கீடு தாமதமானதால், அடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, இப்பணிக்கு, 55.4 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், மேம்பாலம் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை, நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே, 900 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்திற்கு, புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வு முடிந்தவுடன், அடுத்த மாதம் கட்டுமான பணிகள் துவங்கும்.
ஓராண்டிற்குள், மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

