/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிவட்ட சாலை பராமரிப்பு நெடுஞ்சாலை துறை அலட்சியம்
/
வெளிவட்ட சாலை பராமரிப்பு நெடுஞ்சாலை துறை அலட்சியம்
வெளிவட்ட சாலை பராமரிப்பு நெடுஞ்சாலை துறை அலட்சியம்
வெளிவட்ட சாலை பராமரிப்பு நெடுஞ்சாலை துறை அலட்சியம்
ADDED : பிப் 23, 2024 12:11 AM

செங்குன்றம், வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்டச் சாலை 62.3 கி.மீ., துாரமுடையது. சென்னை - ஆவடி - பூந்தமல்லி உள்வட்ட சாலைகளை இணைக்கும் இச்சாலை, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. இந்த சாலையின் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக, நல்லுார், ஆவடி, பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களை இணைக்கும் பகுதிகளில், அடிக்கடி விளக்குகள் எரிவதில்லை.
வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், சாலையோரத்தில் 10 அடி இடைவெளியில் அமைக்கப்பட்ட, 'ரிப்ளக்டர்' எனப்படும் 'சமிக்ஞை' விளக்குகள், அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதனால், இரவில் கும்மிருட்டான சாலையில் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், சாலையின் பல இடங்களில் தவறான பெயர் பலகைகளால், வாகன ஓட்டிகள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்
குறிப்பாக, செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம், கோணிமேடு சந்திப்பு அருகே, மீஞ்சூர் செல்லும் திசையில், இடது பக்கமாக ஆவடி, கொளத்துார் ஆகியவை இருப்பதாக, அம்புக்குறி காண்பிக்கப்பட்டுள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.
அதேபோன்று, நெமிலிச்சேரி அருகிலும் குழப்பமான பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரச்னையால், வாகன ஓட்டிகள், வீணாக சில கி.மீ., துாரம் பயணித்து, நேர விரயத்திற்கும் ஆளாகின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு நிர்வாகம், சாலை கட்டமைப்புகளை கண்காணித்து பராமரிப்பை மேம்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.