ADDED : மார் 27, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை, வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையின் நடுவே இருக்கும் பள்ளங்கள் மற்றும் சாலை ஓரத்தில் இருக்கும் மண்ணால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
விபத்தை தடுக்க, தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் அறிவுறுத்தலின்படி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை இணைந்து, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் உள்ள சிறு சிறு பள்ளங்களை, தார் ஊற்றி சீரமைத்து, சாலையோரம் உள்ள மண்ணை அகற்றும் பணியில், நேற்று ஈடுபட்டனர்.
இந்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்செழியன், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன் ஆகியோர், நேற்று நேரில் பார்வையிட்டனர்.