/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருமாள் கோவிலில் படப்பிடிப்பு ஹிந்து அமைப்பினர் கண்டனம்
/
பெருமாள் கோவிலில் படப்பிடிப்பு ஹிந்து அமைப்பினர் கண்டனம்
பெருமாள் கோவிலில் படப்பிடிப்பு ஹிந்து அமைப்பினர் கண்டனம்
பெருமாள் கோவிலில் படப்பிடிப்பு ஹிந்து அமைப்பினர் கண்டனம்
ADDED : பிப் 16, 2024 12:20 AM

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக அறிமுகமாகும், 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் பூஜை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சமீபத்தில் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு, பல்வேறு ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிராமணர்களின் குரல் அமைப்புச் செயலர் வரதராஜன், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் கமிஷனருக்கு, இதுகுறித்து இ - மெயிலில் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 36 கால் மண்டபத்தில், கடந்த 15 நாட்களில், இரண்டு படங்களுக்கான பூஜை நடந்துள்ளது. பூஜைக்கு அனுமதி பெறப்பட்டதா, அதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது போன்ற விபரங்களை தர வேண்டும். கோவில் வளாகம், வியாபார இடம் இல்லை. அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களின் செயலை கண்டிக்கிறோம். இந்த சம்பவம் அமைச்சர், கமிஷனர் கவனத்திற்கு வரவில்லை என்றால், அனுமதி அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'கோவில் மண்டபத்தில் யாரும் படப்பிடிப்பு நடத்தவில்லை.
படத்திற்கான பூஜை செய்ய வந்தோர், புகைப்படம் மட்டும் எடுத்துச் சென்றனர். அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்' என்றனர்.
- -நமது நிருபர்- -