/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கேரளா, கர்நாடகா வெற்றி
/
ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கேரளா, கர்நாடகா வெற்றி
ADDED : ஜூன் 23, 2025 01:28 AM

சென்னை:ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் தொடரில், நேற்றைய ஆட்டங்களில், கேரளா மற்றும் கர்நாடகா அணிகள் வெற்றி பெற்றன.
ஹாக்கி இந்தியா ஆதரவில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் தொடர், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.
தொடரில், நாட்டில் 20 மாநிலங்களைச் சேர்ந்த ஆடவர் பிரிவில், 12 அணிகள்; மகளிர் பிரிவில் எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தன் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன், தலா ஒரு முறை மோதுகின்றன.
நேற்று காலை நடந்த பெண்களுக்கான முதல் ஆட்டத்தில், ஹிமாச்சல் மற்றும் கர்நாடகா அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 2 - 0 என்ற கணக்கில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், கேரளா அணி, 5 - 1 என்ற கணக்கில் மஹாராஷ்டிரா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
இன்று காலை பெண்களுக்கான போட்டியில், ஒடிசா - ஹரியானா, பஞ்சாப் - தமிழகம் அணிகள் மோதுகின்றன. ஆண்களில் சத்தீஷ்கர் - மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா - கர்நாடகா அணிகள் எதிர்கொள்கின்றன. போட்டிகள், 27ம் தேதி வரை நடக்கின்றன.

