/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சென்னையில் பிரான்ஸ் அணி பயிற்சி
/
ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சென்னையில் பிரான்ஸ் அணி பயிற்சி
ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சென்னையில் பிரான்ஸ் அணி பயிற்சி
ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சென்னையில் பிரான்ஸ் அணி பயிற்சி
ADDED : நவ 25, 2025 04:30 AM

சென்னை: சென்னையில் வரும் 28ம் தேதி, ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை போட்டி துவங்கவுள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில், பிரான்ஸ் அணி நேற்று ஈடுபட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும், 14வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை போட்டி, தமிழகத்தின் மதுரை மற்றும் சென்னையில், வரும் 28ம் தேதி துவங்க உள்ளது.
இதற்காக, உலக நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் அணிகள், போட்டியில் பங்கேற்க தமிழகத்திற்கு வரத்துவங்கியுள்ளன. உலகக்கோப்பைக்கான தீவிர பயிற்சியில், அவை ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னையின் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், பிரான்ஸ் அணி நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டது.