ADDED : ஆக 18, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தி.நகர், வெங்கட்ரமணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், மூன்று நாள் பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. அதை முன்னிட்டு, நேற்று மாலை, அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடந்தது.
பவித்ர உத்சவத்தின் முதல் நாளான இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை யாக சாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், பவித்ர பிரதிஷ்டை நடத்தப்படுகிறது.