ADDED : அக் 25, 2024 12:32 AM
அ நிறம் | அளவு
மாம்பலம், தி.நகர் பாலாஜி கோவில் தெருவைச் சேர்ந்தவர், முத்து, 29; கார் ஓட்டுனர்.
இவரது மனைவி வாசுகியின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர், கடந்த 23ம் தேதி வீட்டிற்கு வர இருந்ததால், இருவரும் வேலைக்குச் சென்ற போது, வீட்டை பூட்டி சாவியை வெளியே வைத்து விட்டுச் சென்றனர்.
பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பீரோவை பார்த்த போது, அதில் வைத்திருந்த, 90,000 ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம், 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் 2,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு அளித்த புகாரின்படி, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
