ADDED : அக் 16, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, தரமணி, ஓ.எம்.ஆரில் 300க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இந்த மழைக்கும் வேளச்சேரி, ஆலந்துார், கிண்டி, காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், அடையாறு பகுதிகளில் உள்ள, தங்கும் விடுதிகள் மட்டுமின்றி நட்சத்திர ஹோட்டல்களிலும் அறைகள் நிரம்பின. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர், தங்கள் இருசக்கர வாகனங்களை, மின்துாக்கியில் ஏற்றி அந்தந்த வீட்டு தளங்களில் நிறுத்தினர்.
கனமழை எச்சரிக்கையால், நேற்று மழைக்கு இடையே கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. கடந்த ஆண்டு சில பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இம்முறையும் மூட வாய்ப்புள்ளது என கருதியவர்கள், மதுபாட்டில்களை இருப்பு வைக்க கடைகளில் திரண்டனர்.