/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ரன்வே'யில் நிறுத்தப்பட்ட ஹாங்காங் சரக்கு விமானம்
/
'ரன்வே'யில் நிறுத்தப்பட்ட ஹாங்காங் சரக்கு விமானம்
ADDED : ஜூலை 05, 2025 12:45 AM
சென்னை, ஹாங்காங் புறப்பட்ட சரக்கு விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட 'ரன்வே'யில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு, 'கேதே பசிபிக்' நிறுவனத்தின் கார்கோ விமானம், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் '100 டன்' சரக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன.
விமானம் 'ரன்வே'யில் ஓடத் துவங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுதாரித்த விமானி, ரன்வேயில் விமானத்தை நிறுத்தி, விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். பின், இழுவை வாகனம் மூலம், விமானம் கார்கோ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழுவினர், கோளாறு சரி செய்ததையடுத்து, இரண்டு மணி நேரம் தாமதமாக, இரவு 10:00 மணிக்கு விமானம் ஹாங்காங்கிற்கு புறப்பட்டது.