/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெருவுக்கு பெயர் சூட்டி மூதாட்டிக்கு மரியாதை
/
தெருவுக்கு பெயர் சூட்டி மூதாட்டிக்கு மரியாதை
ADDED : ஜன 15, 2024 02:00 AM

அயப்பாக்கம்:அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார், 71. இவரது மனைவி பானுமதி அம்மாள், 67. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட பானுமதி அம்மாள், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.அவரது ஆசைப்படி, உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உரிய அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், அவர் வாழ்ந்த தெருவிற்கு 'பானுமதி அம்மாள் தெரு' என, பெயரிட ஊராட்சி மன்றம் சார்பில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரமணி கூறுகையில், ''பொது மக்கள் பிரச்னைகளில், பானுமதி அம்மாள் தாமாக முன்வந்து குரல் கொடுத்து வந்தார்.
அவரது நினைவாக, அவர் வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயர் வைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
ஜன., 26ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்,'' என்றார்.