/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாக்டர்ஸ் மற்றும் ஆடிட்டர்ஸ் கவுரவிப்பு
/
டாக்டர்ஸ் மற்றும் ஆடிட்டர்ஸ் கவுரவிப்பு
ADDED : ஜூலை 02, 2024 12:08 AM

சென்னை, டாக்டர்ஸ் மற்றும் ஆடிட்டர்ஸ் தினத்தை முன்னிட்டு ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3233 சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில், சார்ட்டட் அக்கவுண்டர்கள் ரேவதி ரகுநாதன், மற்றும் சந்தான கிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டர்ஸ் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3233 சார்பில், நேற்று தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் புகழ் பெற்ற மருத்துவர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இவ்விழாவில், தி ஹிந்து குழுமம் தலைவர் என். ராம், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3233 கவர்னர் மகாவீர் போத்ரா, எஸ்.ஐ.ஆர்.சி., தலைவர் கீதா, வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவமனை செயலர் மருத்துவர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், மருத்துவர்கள் பல்ராம் பிஸ்வகுமார், சின்னசாமி, கந்தையா ரங்கசாமி, பிரித்திகா சாரி, மற்றும் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அதேபோல், சார்ட்டட் அக்கவுண்டர்கள் - டாக்டர். சின்னசாமி, பட்டாபி ராம், ரவிசங்கர், ரேவதி ரகுநாதன், மற்றும் சந்தான கிருஷ்ணன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதில், விருது பெற்ற சார்ட்டட் அக்கவுண்டர் ரேவதி ரகுநாதன் பேசியதவாது :
என்னுடைய காலத்தில் பெண்கள் படிப்பை முடிப்பது சவாலாக இருந்தது. அதிலும், கடினமாக உள்ள சி.ஏ., படிப்படும் அவ்வளவு எளிதல்ல. ஒரு பெண் தனது வாழ்க்கையில் சாதிக்கும் போது, அதில் பல பெண்களின் ஆதரவு இருக்கும்.
அவ்வாறு சாதித்த பெண்களுக்கு எனக்கு உதவியாக இருந்த தாய், மாமியார், மகள்கள் என, அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், விருது பெற்ற சார்ட்டட் அக்கவுண்டர் சந்தான கிருஷ்ணன் கூறியதாவது, ‛சமூக சேவை என்பது உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். எனது அலுவலத்தில் தினமும் 20 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. தொழிலையும், சேவையும் தனித்து பார்க் வேண்டாம் '