/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனை டீன் புகார்: வராகி மீது வழக்குப்பதிவு
/
மருத்துவமனை டீன் புகார்: வராகி மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 23, 2024 06:21 AM
சென்னை : கொரோனா காலகட்டத்தில், தன்னை பற்றி சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பி, 'யு - டியூபர்' வராகி, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தார் என, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து, நான்கு பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வியாசர்பாடி, முல்லை நகர் கிழக்கு அவென்யு சாலையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாரதி, 47, என்பவர், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 'காஸ்' ஏஜன்சி உரிமம் வாங்கி தருவதாக கூறி, 5 லட்ச ரூபாய் வாங்கி வராகி மோசடி செய்தார் எனவும், பணத்தை திருப்பி கேட்ட போது, கூட்டாளிகள் மூவருடன் சேர்ந்து, தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் வைத்திலிங்கம் என்பவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், வராகி கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.