ADDED : மார் 02, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்ட அரசு காசநோய் மருத்துவமனை, பூந்தமல்லியில் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டடப்பட்ட இந்த மருத்துவமனையின் கட்டடம் சேதமானதால், புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, இந்த காசநோய் மருத்துவமனையின் அருகே, தற்காலிக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக அலுவலகம், ஆவடி அரசு மருத்துமனைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 3.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டும் பணி துவங்கியுள்ளது.
