ADDED : மார் 09, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு, சுகம் மருத்துவமனை சார்பில், தனியாங்கி துணிப்பை வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முழுதும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவொற்றியூர் மண்டலம், பெரியார் நகரில் தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டது.
சுகம் மருத்துவமனை சார்பில், 3 லட்சம் ரூபாயில், 'இன்ஸ்டாகுட்' நிறுவனத்தால், தானியங்கி துணிப்பை இயந்திரம் நிறுவப்பட்டது. இதை, நேற்று முன்தினம், சுகம் மருத்துவமனை தலைமை மேலாளர் செல்வராஜ், மேலாளர் பால ரவீந்திரன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
