/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு தவறான சிகிச்சை? மருத்துவமனை முற்றுகை
/
சிறுமிக்கு தவறான சிகிச்சை? மருத்துவமனை முற்றுகை
ADDED : மார் 21, 2025 12:31 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி., பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்; பிளம்பர். பாரத் முன்னனி அமைப்பின், ஆர்.கே., நகர் பொறுப்பாளராக உள்ளார்.
இவரது, 12 வயது மகள் தனியார் பள்ளியில், 7 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
அவரை, அதே பகுதியில் செயல்பட்டு வரும், கே.கே மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த பெண் மருத்துவர் கொடுத்த மருந்தை அருந்திய சிறிது நேரத்தில், சிறுமியின் முகம் வீங்கி, விகாரமாக மாறி யுள்ளது. அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், மருத்துவமனை நிர்வாகத்தை அணுகியுள்ளார்.
'இது, சாதாரண வீக்கம் தான்; பெரிதுபடுத்த வேண்டாம்' என, மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை முடியும் முன், 'டிஜ்சார்ஜ்' செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பாரத் முன்னனி அமைப்பினர், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அங்கு வந்த, ஆர்.கே., நகர் போலீசார், பெற்றோரை சமாதானம் செய்தனர். உரிய சிகிச்சை அளிக்கப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.