ADDED : ஜன 26, 2026 05:17 AM

அ நிறம் | அளவு
ராயபுரம்: பல்நோக்கு மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள், பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்தினர்.
பல்நோக்கு மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்யக்கோரி, அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், 6வது நாளாக நேற்று, பிராட்வே, எஸ்பிளனேடு சாலையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல்நோக்கு மருத்துவமனைகளில் பணியாற்றும், 3,500 பணியாளர்கள் உள்ளனர். அவர்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், 6வது நாளான நேற்று, 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
