தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தங்கும் விடுதி கட்டணம் ரூ.100 உயர்வு

 தங்கும் விடுதி கட்டணம் ரூ.100 உயர்வு

 தங்கும் விடுதி கட்டணம் ரூ.100 உயர்வு


ADDED : மே 21, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளியூரிலிருந்து சென்னை வரும் பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், இருபாலருக்குமான தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில், ஆண்கள் 150 பேரும், பெண்கள் 75 பேரும் தங்கலாம்; கழிப்பறைகள் வசதியும் உண்டு.

இரண்டு ஆண்டுகளாக, விடுதியில் ஒருவர் 12 மணி நேரம் தங்க, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. திடீரென, விடுதியை பராமரிக்கும் பி.வி.ஜி., என்ற ஒப்பந்த நிறுவனம், கட்டணத்தை 300 ரூபாயாக உயர்த்தி வசூலித்து வருகிறது.

மதுரையைச் சேர்ந்த தங்கசாமி என்ற பயணி கூறுகையில், 'இந்த கட்டண உயர்வு, தனியார் தங்கும் விடுதிக்கு இணையாக உள்ளது. இதுகுறித்து, முதல்வரின் தனி பிரிவிற்கு புகார் அளித்துள்ளேன்' என்றார்.

பி.வி.ஜி., நிறுவன பொறுப்பாளர்கள் கூறுகையில், 'கோடை காலம் என்பதால், 'ஏர் கூலர்' வசதி செய்யப்பட்டு உள்ளது. அந்த சேவையை பயன்படுத்துவோருக்கு மட்டுமே, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் விசிறி பயன்படுத்துவோருக்கு 200 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us