/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களுக்கு சூடாக உணவு
/
துாய்மை பணியாளர்களுக்கு சூடாக உணவு
ADDED : டிச 08, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு, உணவு வழங்கும் திட்டம், கடந்த மாதம் துவக்கப்பட்டது. உணவை 'புட் ஸ்விங் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து உணவு தயாரித்து, பார்சல் செய்து, வார்டு வாரியாக வழங்குகிறது.
இதில், 24,417 பேருக்கு மதியம்; 1,538 பேருக்கும் இரவு; 5,418 பேருக்கு காலை என, 31,373 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
காலதாமதம், உணவு ஆறிப்போவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, பெரிய 'ஹாட் பாக்ஸ்'சில் உணவை வைத்து, வரும் 15ம் தேதி முதல் சூடாக பரிமாற முடிவு செய்யப்பட்டுள்ளது.

