ADDED : அக் 07, 2024 01:20 AM
அ நிறம் | அளவு
கண்ணகிநகர்:ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியில் ேஹாட்டலில், பாட்னர் உரிமையில் விஜயலட்சுமி மற்றும் ராஜகுமாரி ஆகியோர் இடையே, பிரச்னை உள்ளது.
இந்நிலையில், இருதினங்களுக்கு முன், ேஹாட்டலில் புகுந்த 10க்கும் மேற்பட்டோர், அங்குள்ள ஊழியர்களை தாக்கி, பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து, ஊழியர் தமிழ்செல்வன் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
