/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் அடிதடி செய்த ஹோட்டல் ஓனர் கைது
/
போதையில் அடிதடி செய்த ஹோட்டல் ஓனர் கைது
ADDED : ஜூன் 05, 2025 12:36 AM

சென்னை, சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கட்குமார், 45; தொழில் அதிபர். இவர், கடந்த மாதம், 22ம் தேதி இரவு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள, 'லார்டு ஆப் தி டிரிங்க்ஸ்' என்ற மதுக்கூடத்தில் மது அருந்தியபோது, அவருக்கும், பக்கத்து மேஜையில் இருந்த, ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வெங்கட்குமாரை அந்த நபர்கள் கடுமையாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த நுங்கம்பாக்கம் போலீசார், மயிலாப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் பிரசாத், 33, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் கணேஷ்குமார், 42, போரூர் தனசேகரன், 29, ஆகியோரை கைது செய்தனர்.
அ.தி.மு.க., பிரமுகரான பனையூரைச் சேர்ந்த அஜய்ரோகன், 36, ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திர சேதுபதி ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய, இ.சி.ஆரில், 'துாண்டில் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வரும் ராஜா, 36, என்பவர், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கியிருந்த தெரிந்து, அவரை நேற்று, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.