ADDED : மார் 21, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்,46. இவரது மனைவி மீனாட்சி,46. இவர்கள் ஆதம்பாக்கம், பாலாஜி நகரில் மூன்று ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
மகாலட்சுமி நகர் பிரதான சாலையில், கேசவ பவன் எனும் ஹோட்டலை பிரேம்குமார் தன் மூத்த மகன் அபிஷேக் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் ஹோட்டலில் இருந்த பிரேம்குமார், வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். வீடு திரும்பவில்லை. அவரின் மொபைல் போனும்,'சுவிட் ஆப்' செய்யப்பட்டு உள்ளது.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்காததால், மீனாட்சி கொடுத்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.
***