ADDED : நவ 10, 2024 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:வியாசர்பாடி, பி.வி.காலனி, 28வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 30; கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கிருத்திகா, 23, என்ற மனைவி உள்ளார்.
நேற்று காலை சதீஷ் வேலைக்கு சென்ற நிலையில், கீர்த்திகா தன் வீட்டை பூட்டி, வீட்டருகே உள்ள தன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின், நேற்று மாலை 5:00 மணியளவில் வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பீரோவில் இருந்த 30,000 ரூபாய் மதிப்பிலான தங்க செயின் திருடு போனது. இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.